Thursday, 13 October 2011

பணம் கொளிக்கும் பி.டி.சி தளங்கள் ஏமாறும் பிளாக்கர்கள்:

. Thursday, 13 October 2011

இன்று நடை முறையில் இணையத்தை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்ற தேடலில் தான் நமது நேரத்தை மிக அதிகமாக செலவிடுகின்றோம் ஆனால் அவைகள் அனைத்தும் போலிகள் என்று ஏன் நமக்கு தெறியவில்லை.காரணம் அதிக ஆசை உதாரணமாக இன்று நீங்கள் எங்கள் நிருவனத்தில் சேர்ந்தால் $2 தருகின்றோம் உங்கள் நண்பர்களையும் இதில் இணையுங்கள் அதற்கு தனியாக "ரெஃபெரல் கமிஸன் " உங்களுக்கு உண்டு இது போன்று செய்தால் மாதம் நீங்கள் $1000 வரை சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்கள்,இவைகளை பார்த்த உடனே நாம் அந்த தளத்தில் இணைந்துவிடுகின்றோம் பிறகு நம்ம்கு தெறிந்த நண்பர்களையும் அதில் இணைகின்றோம் இதில் ஆதாயம் அடைவது அந்த தளங்கள் தான்,அது எப்படி என்று பார்போம்.

பி.டி.சி தளங்கள் என்றால் என்ன?
ஒரு நிருவனமானது தங்களின் விளம்பரங்களை உலக பார்வையாளர்களை சென்றடைய இது போன்ற இடைதரகர்கள் என்று சொல்லப்படும் ஆன்லயன் மார்கெட்டிங் பப்லிசர்ஸ் களிடம் செல்வார்கள் அவர்களுக்கு சொந்தம்மானது தான் இந்த பி.டி.சி தளங்கள்,இந்த தளங்களில் வரும் பார்வையாளர்கள் குறிப்பிட்ட விளம்பரங்களை கிளிக் செய்து குறைந்தது 30 வினாடிகளாவது பார்க்க வேண்டும் அவ்வாறு பார்த்தாள் பார்வையாளர்களுக்கு குறைந்தது $0.0001வரைக்கும் தருவார்கள் இவ்வாறு தினமும் செய்தால் மாதம் $1000 வரை சம்பாதிக்கலாம் என்பார்கள்,இந்த பணத்தை உங்கள் அக்கவுன்டுக்கு மாற்ற தேவைப்படும் மிககுறைந்த அளவு பெலன்ஸானது $20 என்பார்கள், குறிப்பாக அமெரிக்க நிருவனங்கள் அதிகமாக குறி வைப்பது நமது இந்தியர்களை தான் ஏனென்றால் மிக அதிகமான இணைய பயன்பாட்டார்கள், இவர்களிடம் ஒருமுறை இணைந்து வேலை செய்தால் $20 வருவதர்குள் உங்கள் அக்கவுன்டை லாக் செய்துவிடுவார்கள் அல்லது உங்கள் லாகினுக்குள் எந்த விளம்பரங்களும் வராமல் செய்துவிடுவார்கள், இதனால் அந்த நிருவனத்திற்குதான் இரடிப்பு லாபம் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அவர்கள் ஆட் கொடுப்பவர்களிடம் பணம் பெற்று கொண்டு உங்களை வைத்து அதை பார்க்க வைத்து உங்கள் அக்கவுண்டை லாக் செய்து அந்த மொத்த அமொன்டை அவர்களே எடுத்து கொள்வார்கள் மேலும் தினம் தினம் அவர்களது தளங்களை நீங்கள் சென்று பார்வை இடுவதால் அவர்களது ரேங்கிங்கும் கூடிவிடுகின்றது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...